விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு   இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

ஆனைமலையை சேர்ந்தவர் ஆரூண் ரசீத். இவர் கடந்த 2011-ம் ஆண்டு கோவையில் இருந்து சேலம் செல்லும் பஸ்சில் சங்கிரி அருகே சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆரூண் ரசீத் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து அவர் 2013-ம் ஆண்டு பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் அவருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.17 லட்சத்து 15 ஆயிரத்து 46 இழப்பீடு தொகை வழங்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கோர்ட்டு நீதிபதி மோகன வள்ளி, இழப்பீடு வழங்காததால் கோவையில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.


Next Story