வெளிமாநில நாவல் பழங்கள்கிலோ ரூ.320-க்கு விற்பனை


வெளிமாநில நாவல் பழங்கள்கிலோ ரூ.320-க்கு விற்பனை
x

வெளிமாநில நாவல் பழங்கள் கிலோ ரூ.320-க்கு விற்பனையாகி வருகிறது.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் மரங்கள் நெடுஞ்சாலை ஓரங்கள் மற்றும் குளக்கரை பகுதிகளில் ஓரளவு உள்ளன. அவற்றில் இருந்து உற்பத்தி ஆகும் நாவல் பழங்கள் பெரும்பாலும் தானாக பழுத்து கீழே கொட்டி வீணாக போய் விடுவது உண்டு. இப்பகுதிகளில் நாவல் பழங்கள் இன்னும் காய்ப்புக்கு வராத நிலையில், ஆந்திர மாநில பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மூலமாக, நாவல் பழங்களை வாங்கி வந்து கிலோ ரூ.320 வரை விற்பனை செய்து வருகின்றனர். இதனை அவ்வழியாக வாகனங்களில் செல்லும் ஒரு சிலர் வாங்கி சென்று வருகின்றனர். விலை அதிகமாக இருப்பதால் உள்ளூர் வாசிகள் பெரும்பாலும் இவற்றை விரும்பி வாங்குவது இல்லை எனவும் கூறப்படுகிறது. உள்ளூர் பகுதிகளில் உள்ள நாவல் மரங்களில் சீசன் சமயங்களில் அதிக அளவில் காய்கள் காய்த்து பழுத்து கீழே கொட்டி வரும் நாவல் பழங்களை ஒரு சில சிறுவர்கள் அவற்றை ஆவலுடன் ருசி பார்த்து வருகின்றனர். மீதமுள்ள பழங்கள் கீழே கொட்டி வீணாகி வருவதாகவும், நாவல் பழங்கள் சர்க்கரை வியாதி உள்பட பல்வேறு வகையான வியாதிக்கு அருமருந்தாக இருந்து வருகிறது. அதனால் தான் வரலாற்றில் கூட நாவல் பழங்களின் சிறப்பு தனித்துவமாக விளங்கி வருகிறது.


Next Story