மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் ஆய்வு
விருகல்பட்டி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
விருகல்பட்டி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
மக்காச்சோளம் சாகுபடி
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கோழி பண்ணைகளும் அதிக அளவில் உள்ளன. மக்காச்சோளம் கோழி தீவனமாக பயன்படுவதால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்பகுதிகளில் மானாவாரியாகவும், கிணற்று பாசனம் மூலமாகவும், பி.ஏ.பி. பாசனம் மூலமாகவும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. விருகல்பட்டி, அடிவள்ளி, விருகல்பட்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மக்காச்சோளம், பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மக்காச்சோள பயிர்களை பாதுகாக்க பழைய துணிகளை வாங்கி பயிர்களை சுற்றிலும் கட்டிவைத்துள்ளனர். இருந்த போதிலும் காட்டுப்பன்றிகள்இரவு நேரம் மட்டும் அல்லாமல் பகல் நேரங்களிலும் மக்காச்சோளம் பயிர்களை நாசம் செய்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விருகல்பட்டி பழையூர் பகுதியில் பருத்தி செடிக்கு உரம் வைப்பதற்காக சென்ற பெண் காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்தார். இந்த நிலையில் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
வனத்துறையினர் ஆய்வு
விருகல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மர்மவிலங்கு நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததை தொடர்ந்து வனத்துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
விருகல்பட்டிபுதூர், பழையூர், மிருகல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறை விலங்குகளின் கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இப்பகுதிகளில் ஆய்வு செய்த வனத்துறையினர் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினர்.