பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது


பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது
x

பறவைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது

திருப்பூர்

திருப்பூர்

தமிழ்நாடு வனத்துறை ஆனைமலை புலிகள் காப்பக திருப்பூர் வனசரகம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முன்னோட்ட கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணா தலைமை தாங்கி பேசும்போது, 'நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை இந்த பகுதியில் வசிக்கக்கூடிய ஒவ்வொருக்கும் சொந்தமானதாக கருத வேண்டும். அப்போது தான் சரணாலயத்தை நாம் தூய்மையாக வைத்திருக்க முன்வருவார்கள். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட நெகிழிப்பையை சரணாலயத்துக்குள் போடக்கூடாது. அவ்வாறு போடப்படும் பிளாஸ்டிக் பைகளால் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படும். சரணாலயத்துக்கு வரும் பறவைகளை பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்த தீங்கும் விளைவிக்கக்கூடாது. வருகிற 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்த பகுதியில் உள்ள அனைவரும் சுற்றுச்சூழலை பேணிக்காப்போம். பறவைகளை காப்போம் என்ற சபதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

மாணவ செயலாளர்கள் ராஜபிரபு, காமராஜ், விஜய், பூபதிராஜா, மதுகார்த்திக் ஆகியோர் இயற்கை காப்பது குறித்து விழிப்புணர்வு நடனம் ஆடினார்கள். வனச்சரக அலுவலர்கள் முருகானந்தம், வெங்கடாசலம், மணிகண்டன், வெங்கடேஷ், காமராஜ் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.


Next Story