பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது


பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது
x

வாலாஜா அருகே நடந்த பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜா அருகே நடந்த பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்காதலன் கைது

காவேரிப்பாக்கம் அருகே உள்ள ராமநாதபுரம் காலனியை சேர்ந்தவர் ரேஷ்மலதா. இவர் கடந்தசில நாட்களுக்கு முன்பு அங்குள்ள பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ரேஷ்மாவை கொலை செய்ததாக வாலாஜா தாலுகா கீழ்விஷாரம் கொளத்துமேட்டு பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் மகன் குமரன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வேறு ஒருவருடன் திருமணம்

குமரன் மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை அடையாறில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். அப்போது இவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்த ரேஷ்மலதா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

ரேஷ்மலதா வாலாஜாரை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே உள்ள ராமநாதபுரம் காலனியை சேர்ந்தவர். இந்தநிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு முன்பு ரேஷ்மலதாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.

கழுத்தை இறுக்கி கொலை

இந்த நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் நட்பு உருவாகி உள்ளது. குமரன் அடிக்கடி செல்போனில் பேசுவது ரேஷ்மலதாவிற்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியதால் அவர் போனில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வருவதால் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்றும் அதன்பிறகு நாம் சந்திக்க தேவையில்லை என்று குமரன் கூறியிருக்கிறார்.

அதன்பேரில் கடந்த மாதம் 22-ந்் தேதி வாலாஜா பாலாறு அணைக்கட்டு அடுத்த சாத்தம்பாக்கம் கிராம கால்நடை தீவன பண்ணை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ரேஷமலதாவை, குமரன் கட்டாயப்படுத்தி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் துப்பட்டாவால் ரேஷ்மலதாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு, கம்மல், கால் கொலுசு, மெட்டி ஆகியவற்றை திருடி கொண்டு, ரேஷ்மலதாவின் உடலை கசக்கால்வாய் ஓடையில் தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Next Story