குட்டையில் சாயக்கழிவு நீர் விட்டதாக 2 வாகனங்களை சிறை பிடித்த விவசாயிகள்


குட்டையில் சாயக்கழிவு நீர் விட்டதாக  2 வாகனங்களை  சிறை பிடித்த விவசாயிகள்
x

பல்லடம் அருகே குட்டையில் சாயக்கழிவு நீர் விட்டதாக புகாரை தொடர்ந்து 2 வாகனங்களை விவசாயிகள் சிறை பிடித்தனர்.

திருப்பூர்

பல்லடம் அருகே குட்டையில் சாயக்கழிவு நீர் விட்டதாக புகாரை தொடர்ந்து 2 வாகனங்களை விவசாயிகள் சிறை பிடித்தனர்.

சாயக்கழிவு நீர்

பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி அருள்புரம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் பாச்சாங்காட்டுபாளையத்தில் உள்ள வழித்தடம் வழியாக குட்டைக்குள் விடப்பட்டதாக கூறி அப்பகுதி விவசாயிகள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை சிறை பிடித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மழைக்காலங்களில் அடிக்கடி இதுபோல் சாய கழிவு நீரை குட்டைக்குள் திறந்து விடுவதை சாய ஆலைகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வழித்தடம் வழியாக சாயக்கழிவு நீர் குட்டையில் கலக்கப்பட்டுள்ளது.

வழித்தடத்தில் விடப்பட்ட சாயக்கழிவு நீரை மறைப்பதற்காக வழித்தடம் முழுவதும் வாகனங்களில் மண்ணை கொட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்டபோது வாகனங்களை விவசாயிகள் சிறைப்பிடித்தனர். சுத்திகரிப்பு நிலையம் இது போன்ற விதிமீறலில் ஈடுபட்டது கவலை அளிக்கிறது இ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் ஆய்வு

விவசாயிகள் புகாரை தொடர்ந்து பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் மற்றும் கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் கவுரி ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தாசில்தார் உத்தரவின் பேரில் இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story