அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்


அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்
x

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கரூர்,

100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.2-வது நாளாக நேற்று விசாரணை நடந்த நிலையில் இரவு 12.25 மணிக்கு நீதிபதி பரத்குமார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மறு உத்தரவு வரும் வரை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஜாமீன் தொகையாக ரூ.25,000 செலுத்தவேண்டும். நாள்தோறும் வாங்கல் காவல் நிலையத்தில் ஒரு முறையும், கரூர் சிபிசிஐடி அலுவலத்தில் காலை, மாலை இரு வேளை கையெழுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

1 More update

Next Story