வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மயங்கி விழுந்தது


வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மயங்கி விழுந்தது
x

வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது கட்டையில் மோதிய காளை நிலைகுலைந்து மயங்கி சரிந்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்குவதற்காக ஜல்லிக்கட்டு வீரர்கள் ஆர்வத்துடன் முன்னேறிக் கொண்டு சென்றனர்.

அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வரும் வழியில் வைக்கப்பட்டிருந்த கட்டையின் மீது காளை மோதியது. இதனால் நிலைக்குலைந்த காளை, அங்கேயே மயங்கி சரிந்தது. இதையடுத்து உடனடியாக விஜயபாஸ்கரின் காளை மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story