விவசாய தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்
விவசாய தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்
தளி,
உடுமலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரமேஷ் தலைமை வகித்தார். வெங்கடாசலம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் ரகுபதி தொடக்க உரையாற்றினார்.மாவட்ட குழு உறுப்பினர்கள் ரணதேவ், நந்தகோபால், தாலுகா செயலாளர் சௌந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் சொந்த வீடு இல்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்கமாறும், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைகளை சீரமைத்து வேலை வழங்க கோரியும், 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகரங்களுக்கு விரிவுபடுத்த கோருதல், உடுமலை பகுதியில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினைகளை சீரமைத்து அனைவருக்கும் தண்ணீர் வழங்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தலைவராக எம்.நந்தகோபால், செயலாளராக எம்.ரமேஷ், பொருளாளராக பஞ்சலிங்கம் உள்ளிட்ட வட்டார கமிட்டி நிர்வாகிகள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.