ஆடித்திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது


ஆடித்திருவிழாவை முன்னிட்டு  கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது
x

ஆடித்திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

சேலம்

சேலம்,

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். ஆடித்திருவிழா தொடங்கிய நாள் முதல் விழா முடியும் வரை கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அதன்படி இந்த ஆண்டு ஆடித்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அபிஷேகம்

தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி இரவு சக்தி அழைத்தல் நடக்கிறது. 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பொங்கல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

16-ந்தேதி பால் குடம் எடுத்தல், மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடைபெற உள்ளன. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராசாராம், விழாக்குழு தலைவர் எஸ்.டி. ஹார்டுவர்ஸ் வி.சக்திவேல், பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி மற்றும் கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

செங்குந்தர் மாரியம்மன் கோவில்

இதே போன்று அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதே போன்று அம்மாபேட்டை பலப்பட்டறை மாரியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாநகரில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தினமும் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூைஜகள் நடைபெற உள்ளன.


Next Story