பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில செயலாளர் பசும்பொன்ராஜா தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் கார்த்திக் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சமையல் கியாஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் மாநில இளைஞரணி தலைவர் ஜெயராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story