பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


பார்வர்டு பிளாக் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
x

ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் பாலு, தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், சில்வர் பாண்டியன், துரைசரவணன், மணி, இரா.ஹரிஹரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும், உணவு பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை அரசு ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story