பென்னாகரம் அருகேதொப்பையாறு நீர்தேக்கத்தில் இறந்த பெண் அடையாளம் தெரிந்தது


பென்னாகரம் அருகேதொப்பையாறு நீர்தேக்கத்தில் இறந்த பெண் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே தொப்பையாறு மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க பெண் உடலை பெரும்பாலை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த போலீசில் பணியாற்றும் சதீஷ்குமாரின் தாயார் இலஞ்சியம்மாள் (வயது 55) என்பது தெரியவந்தது. இவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சேலம் போலீஸ் குடியிருப்பில் மகனுடன் தங்கியிருந்த இலஞ்சியம்மாள் ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story