சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை,
சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த பல அடுக்கு நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கட்டடங்கள் 315 கோடி செலவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, வி. ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story