நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி


நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் நடந்து வரும் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் நடந்து வரும் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நான்கு வழிச்சாலை

தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் கடலூர் மாவட்டம், பூண்டியாங்குப்பம் பகுதியில் தொடங்கி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. ரூ.2 ஆயிரத்து 120 கோடி மதிப்பில் 56.8 கி.மீ தூரத்திற்கு இந்த விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்திற்குட்பட்ட மேலசெங்கமேடு, நத்தம் ஆகிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை தொடர்பான பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டநாதபுரம் மற்றும் நத்தம் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், இந்த சாலை பணியில் கூடுதலாக சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சட்டநாதபுரம் கிராமத்திற்குட்பட்ட மேலசெங்கமேடு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் சுரங்கபாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு தேவையான நிலஎடுப்பு பணிகள் நடைபெற்று வருவது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் சக்திவேல், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கோபி, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story