ரூ.8.14 லட்சம் மோசடி


ரூ.8.14 லட்சம் மோசடி
x

ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.8.14 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

தனியார் நிறுவன அதிகாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் வசித்து வருபவர் தாமஸ் (வயது 35). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், தரக்கட்டுப்பாட்டு பிரிவில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரூ.8.14 லட்சம் அபேஸ்

இதையடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தாமஸ் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் ரூ.8 லட்சத்து 14 ஆயிரத்து 104-ஐ அமெரிக்கா டாலராக மாற்றிட முதலீடு செய்தார். ஆனால் அதன் பிறகு அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. மேலும் தாமஸ் முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாமஸ் இது குறித்து நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story