பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவு மில்லில் ரூ.3½ கோடி மோசடி 8 பேர் மீது போலீசார் வழக்கு


பாப்பிரெட்டிப்பட்டி அருகே  மாவு மில்லில் ரூ.3½ கோடி மோசடி  8 பேர் மீது போலீசார் வழக்கு
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவு மில்லில் ரூ.3½ கோடி மோசடி செய்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தர்மபுரி

தர்மபுரி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவு மில்லில் ரூ.3½ கோடி மோசடி செய்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாவு மில்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு (வயது 39). இவர் கோதுமையில் இருந்து மைதா, ரவை, தவிடு ஆகியவற்றை தயாரிக்கும் மாவு மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் இவருடைய உறவினரான எழில்பிரகாஷ் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு விற்பனை மேலாளராக நியமித்தார்.

இந்த நிலையில் இந்த மாவு மில்லில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை எழில் பிரகாஷ் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கடைகளுக்கு அனுப்பிய பொருட்களுக்கு உரிய தொகையை மில்லில் பணிபுரியும் சிலரின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வைத்ததாகவும் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த தென்னரசு தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மொத்தம் ரூ.3 கோடியே 50 லட்சம் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மோசடி குறித்து எழில் பிரகாஷ் உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story