பரிசு விழுந்துள்ளதாக கூறி விவசாயியிடம் ரூ.7 லட்சம் மோசடி

பரிசு விழுந்துள்ளதாக கூறி  விவசாயியிடம் ரூ.7 லட்சம் மோசடி
x

பரிசு விழுந்துள்ளதாக செல்போனில் கூறி தர்மபுரியை சேர்ந்த விவசாயியிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி

பரிசு விழுந்துள்ளதாக செல்போனில் கூறி தர்மபுரியை சேர்ந்த விவசாயியிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை சேர்ந்தவர் பாபு (வயது 32). விவசாயி. இவருக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் பரிசு விழுந்திருப்பதாக செல்போனில் குறுந்தகவல் வந்தது. இதனால் அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பாபு பேசினார்.

அப்போது அதில் பேசிய நபர் அந்த பரிசு தொகையை பெற கட்டணமாக ரூ.6 லட்சத்து 99 ஆயிரத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய உடன் பரிசுத்தொகை வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதை நம்பி பாபு அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 99 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.

போலீசார் விசாரணை

ஆனால் அதன் பின் பரிசுத்தொகை இவருடைய வங்கி கணக்குக்கு வரவில்லை. அந்த நபரையும் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு பணம் மோசடி குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story