நிதி நிறுவனம் நடத்தி ரூ.13½ லட்சம் மோசடி 5 பேர் மீது வழக்கு
நிதி நிறுவனம் நடத்தி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது
சிவகங்கை
காரைக்குடி பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி மகேஸ்வரி (வயது42). இவரிடம் காரைக்குடியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் விமலா ஆகியோர் தங்களுடைய உறவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் இதில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதை நம்பி மகேஸ்வரி ரூ.30 லட்சத்தை கடந்த 2021-ம் ஆண்டு 3 தவணைகளில் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவர்கள் ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார்களாம். பாக்கிதொகை ரூ.13½ லட்சத்தை திரும்பித் தரவில்லையாம். இதுகுறித்து மகேஸ்வரி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் விசாரணை நடத்தி பெரம்பலூரை சேர்ந்த சந்தோஷ் குமார், அவரது மனைவி சுதா மற்றும் ரஞ்சனி, காரைக்குடியை சேர்ந்த சுதாகர், விமலா, ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.