மாணவர் சேர்க்கையில் மோசடி; பெண் மீது வழக்கு


மாணவர் சேர்க்கையில் மோசடி; பெண் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் சேர்க்கையில் மோசடி செய்த பெண் மீது பதிவு செய்யப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி புகழேந்தி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் தர்ஷினி, ஹரிதா இருவரையும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வியில் சேர்க்கைக்காக காரைக்குடியில் உள்ள செல்வி எஜூகேஷனல் ட்ரஸ்டினை அணுகி உள்ளார். அவர்கள் இருவரது சேர்க்கைக்கு ரூ.67 ஆயிரம் கேட்டனராம். அதனை இருதவணையாக ரமேஷ் குமார் கொடுத்துள்ளார், பணம் கட்டி நீண்ட நாட்கள் ஆகியும் சேர்க்கைக்கான எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இதுகுறித்து செல்வி எஜூகேஷனல் டிரஸ்ட் நிர்வாகி செல்வியை கேட்டபோது ஏதேதோ காரணங்களை கூறி நாட்களை கடத்தி வந்தாராம். எனவே பணத்தை ரமேஷ் குமார் திருப்பி கேட்டுள்ளார். அதற்கும் அவர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரமேஷ் குமார் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story