ரூ.82 லட்சத்துக்கு இயற்கை உரம் வாங்கி மோசடி


ரூ.82 லட்சத்துக்கு இயற்கை உரம் வாங்கி மோசடி
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இருகூர் அருகே ரூ.82 லட்சத்துக்கு இயற்கை உரம் வாங்கி மோசடி செய்த பஞ்சாப் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

இருகூர்

இருகூர் அருகே ரூ.82 லட்சத்துக்கு இயற்கை உரம் வாங்கி மோசடி செய்த பஞ்சாப் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இந்த மோசடி குறித்து கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

இயற்கை உரம்

கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரில் நண்டுவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருபவர் விக்ரம் சுதாகர் (வயது 42). இவரது நண்பர் திருநாவுக்கரசு, பஞ்சாபில் உள்ளார். அவரை, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரை சேர்ந்த கரம்வீர் செர்கில் (25), பங்கஜ் மித்தல் (25) ஆகிய 2 பேர் சந்தித்தனர். அவர்கள் இயற்கை உரத்தை வாங்கி பஞ்சாபில் விற்பனை செய்வதாக கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசு இயற்கை உரம் தயாரிக்கும் விக்ரம் சுதாகரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் இயற்கை உரத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.82 லட்சம் மோசடி

இதைத்தொடர்ந்து ரூ.82 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள உர மூட்டைகளை விக்ரம் சுதாகர் பஞ்சாப் மாநிலத்துக்கு அனுப்பி வைத்தார். உர மூட்டைகளை பெற்றுக்கொண்ட கரம்வீர் செர்கில், பங்கஜ் மித்தல் ஆகியோர் உரத்துக்கான பணத்தை கொடுக்கவில்லை. நீண்ட நாளாகியும் பணத்தை கொடுக்காததால் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் விக்ரம் சுதாகர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து, பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் கரம்வீர் செர்கில் தப்பி ஓடிவிட்டார். பங்கஜ் மித்தல் பிடிபட்டார். அவரை கைது செய்து, கோவை கொண்டு வந்த ேபாலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பஞ்சாபில் உள்ள ஒரு குடோனில் உர மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதனையும் போலீசார் முடக்கி வைத்தனர். இது தவிர தலைமறைவான கரம்வீர் செர்கில்லை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story