மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்த கார்களை அடமானம் வைத்து மோசடி

மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து கார்களை அடமானம் வைத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து கார்களை அடமானம் வைத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மாத வாடகைக்கு கார்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 42). இவர் அனு ஆதித்யா டிரான்ஸ்போர்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் மாத வாடகைக்கு வாகனங்கள் தேவை என்ற அறிவிப்பை பார்த்தார். தனது காரை வாடகைக்கு விட முடிவு செய்து, அந்த நிறுவனத்தை சேர்ந்த கோவை சரவணம்பட்டியில் உள்ள யசோதா தேவி (32) என்பவரை ரங்கநாதன் சந்தித்தார்.
அப்போது ரங்கநாதன், ஓராண்டு காலத்திற்கு தனது காரை மாதம் ரூ.22 ஆயிரம் வாடகைக்கு விட ஒப்பந்தம் போட்டார். அதைத் தொடர்ந்து முதல் 2 மாதம் மட்டும் யசோதாதேவி வாடகை பணம் கொடுத்தார். 3-வது மாதம் முதல் வாடகை கொடுக்க வில்லை.
பெண் கைது
எனவே ரங்கநாதன், யசோதா தேவியை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், யசோதா தேவியின் வீட்டிற்கு சென்ற போது பூட்டிக் கிடந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் ரேணுகா தேவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல் பலரிடம் மாத வாடகைக்கு கார்களை இயக்குவ தாக கூறி பலரின் கார்களை வாங்கி விட்டு திருப்பி கொடுக்கா மல் யசோதாதேவி ஏமாற்றியதாக தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சின்னமேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த யசோதாதேவியை கைது செய்தனர்.
அடகு வைத்து மோசடி
அவரிடம் இருந்து செல்போன், கணினி உள்ளிட்ட 105 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் யசோதாதேவி, பலரிடம் 20 கார்களை மாத வாடகை ஒப்பந்தம் செய்து கொண்டு முதல் 2 மாதம் மட்டும் வாடகையை வழங்கி உள்ளார்.
அதன்பிறகு வாடகைக்கு ஒப்பந்தம் செய்த கார்களை அடகு வைத்து தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பெற்றுக் கொண்டு பல லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து யசோதாதேவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 கார்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மீதம் உள்ள 13 கார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






