மாற்றுத்திறனாளியிடம் நகை, பணம் மோசடி


மாற்றுத்திறனாளியிடம் நகை, பணம் மோசடி
x

மாற்றுத்திறனாளியிடம் நகை, பணம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நைனா முகமது. இவர் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முகமது என்பவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் வசித்து வருவதாகவும், அவர் தன்னிடம் 23 பவுன் நகை, ரூ.86 ஆயிரத்தை வாங்கிவிட்டு தராமல் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை பெற்ற போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story