கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.21 லட்சம் மோசடி; திருநங்கை கைது


கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.21 லட்சம் மோசடி; திருநங்கை கைது
x

கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.21 லட்சம் மோசடி தொடர்பாக திருநங்கை கைது செய்யப்பட்டார்.

திருச்சி

துவரங்குறிச்சி:

கொலை மிரட்டல்

விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ்(வயது 30). திருநங்கையான இவர் திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கம்மாள தெருவை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான முருகேசன் என்பவர், ஒரு சதுர அடி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் என்று பேசி கூடுதலாக சுற்றுச்சுவரும் கட்டி கொடுத்துள்ளார்.

மேலும் அவரிடம் ரூ.10 லட்சத்தை பபிதாரோஸ் வாங்கி பண பரிவார்த்தனையும் பெற்றுள்ளார். இதனால் தனக்கு வர வேண்டிய மொத்தம் ரூ.21 லட்சத்தை பபிதா ரோசிடம் முருகேசன் கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து முருகேசன், வளநாடு போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருநங்கை கைது

அதன்பேரில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான திருநங்கை பபிதா ரோசை தேடி வந்தனர். இந்நிலையில் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று பபிதா ரோசை கைது செய்தனர்.

இவர் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக ஏற்கனவே பல புகார்கள் உள்ளத்துடன், பலரையும் ஏமாற்றி பணம் பெற்றதாகவும் கூறப்படுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story