ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி


ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி செய்துள்ளதாக தம்பதி மீது போலீசில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த சரண்யா, தீபா, மகாலட்சுமி, கலைவாணி, ரேகா, ராஜேந்திரன், தண்டபாணி ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.நகரை சேர்ந்த தம்பதியினர் குழு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அவர்களிடம் நாங்கள் பணம் கட்டி இருந்தோம். ஆனால் சீட்டு முடிந்தும் எங்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்கள். அவர்களிடம் பணத்தை கேட்ட போது, தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். எங்களிடம் ரூ.21 லட்சம் வரை மோசடி செய்து விட்டார்கள். ஆகவே எங்களுடைய பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இதேபோல் மேலும் பலரிடம் ஏமாற்றி உள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story