அதிக பணம் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி


அதிக பணம் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் அதிக பணம் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி கேரள வாலிபர்கள் உள்பட 5 பேர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த முகமதுஷசன் மகன் முகமது சுல்தான்(வயது 36). இவர் கள்ளக்குறிச்சியில் வியாபாரம் செய்து வருகிறார். பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட இவர் தனது உறவினர் அஷரப்அலி மூலம் கேரளா மாநிலம் ஜேலம்பரா தாலுகா நாலகத்து ஹவுஸ் பகுதியைசேர்ந்த சையதுலவி மகன் நுசைரூல் கரீம்(36), அப்துல்லா மகன் ஆஷிக்(25) ஆகியோரிடம் போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ரூ.25 லட்சம் கொடுத்தால் ஒரு மாதத்தில் ரூ.30 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள். இதை நம்பி நுசைரூல் கரீம், ஆசிக் ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.24 லட்சத்து 93 ஆயிரம் கொடுத்தனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் கொடுத்த பணத்தை திருப்பி தரவில்லை.

இந்த நிலையில் முகமது சுல்தான் கடந்த 6-ந் தேதி போன் மூலம் நுசைரூல் கரீம், ஆசிக் ஆகியோரை தொடர்பு கொண்டு கள்ளக்குறிச்சிக்கு வரவழைத்து பணத்தை கேட்டார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்ததால் இருவரையும் அவர்கள் வந்த காரில் தனது நண்பர்கள் சிலரை உடன் அனுப்பி ரோடுமாமாந்தூரில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்ததாகவும், பின்னர் மறுநாள் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு பணத்தை தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியும் என திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முகமது சுல்தான் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் முகமதுசுல்தான் நசைரூல், ஆசிக் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து இருவரையும் கைது செய்தனர்.

அதேபோல் வியாபாரத்துக்காக முகமது சுல்தானிடம் இருந்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியதாவும், பணத்தை திருப்பி தராததால் தன்னை கள்ளக்குறிச்சிக்கு வரச்சொன்னார். அதன் பேரில் ரோடுமாமாந்தூரில் உள்ள டீ கடைக்கு வந்த தங்களை 5 பேர் கும்பல் காரில் கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக நுசைரூல் கரீம் கொடுத்த புகாரின் பேரில் முகமதுசுல்தான், ரோடுமாமாந்தூர் செல்வம்(23), வேலன், கள்ளக்குறிச்சி சிலம்பரசன்(34), சுரேஷ், அருண் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து முகமதுசுல்தான், செல்வம், சிலம்பரசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story