டிப்பர் செய்து தருவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி


டிப்பர் செய்து தருவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டிப்பர் செய்து தருவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

சின்னசேலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பாபு (வயது 58). கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் சேலம் மாவட்டம் கீரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி (62) என்பவர் விவசாய வேலைக்காக டிராக்டர் டிப்பர் செய்து தர வேண்டும் என கூறியுள்ளார். இதற்காக முன்பணமாக ரூ.65 ஆயிரம் பாபுவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் டிப்பர் செய்து தருவதாக கூறி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவரிடம் ரூ.50 ஆயிரமும், தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 15 ஆயிரமும், அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த குருசாமியிடம் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் வாங்கி உள்ளார். ஆனால் அவர் சொன்னப்படி அவர்களுக்கு டிப்பர் செய்து கொடுக்காமல் பாபு ஏமாற்றியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பாபுவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ததோடு, ரங்கசாமி உள்ளிட்டவர்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story