நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி


நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 23 Jun 2023 1:30 AM IST (Updated: 23 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.47 லட்சம் நகையை மோசடி செய்த பட்டறை அதிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.47 லட்சம் நகையை மோசடி செய்த பட்டறை அதிபரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகைக்கடை உரிமையாளர்

கோவை ராஜவீதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 40). இவர் ராஜவீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தங்க கட்டிகளை நகைப்பட்டறையில் கொடுத்து நகை செய்வது வழக்கம்.

பிரசன்னா, கோவை செட்டிவீதியை சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் முருகனிடம் (வயது 39) கடந்த மே மாதம் 28-ந் தேதி மற்றும் 31-ந் தேதியில் 940 கிராம் தங்க கட்டியை கொடுத்து நகை செய்யுமாறு கூறினார்.

அப்போது ஒரு வாரத்தில் நகை செய்து கொடுத்து விடுவதாக முருகன் கூறினார். ஆனால் அவர் சொன்னபடி நகை செய்து கொடுக்கவில்லை.

ரூ.47 லட்சம் மோசடி

இது குறித்து பிரசன்னா, பலமுறை முருகனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். ஆனால் அவர் நகை செய்து கொடுக்கவில்லை.

இதனால் அவர் நேரடியாக சென்று கேட்ட போதும் நகை செய்து கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.47 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரசன்னா பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் பிரசன்னாவிடம், ரூ.47 லட்சம் நகையை முருகன் மோசடி செய்தது தெரியவந்தது. உடனே முருகனை போலீசார் கைது செய்தனர்.

அவர், அந்த நகையை என்ன செய்தார்? எங்கு வைத்து உள்ளார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story