பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி
பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி
கோவை
முதலீடு செய்யும் தொகைக்குஅதிக லாபம் தருவதாக கூறி, பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து போலீசில் கூறியதாவது:-
பட்டதாரி பெண்
கோவையை அடுத்த கோவைப்புதூர், சிறுவாணி நகரை சேர்ந்தவர் கோபிநாத். இவருடைய மனைவி ரேணுகா (வயது39). முதுகலை பட்டதாரி. இவரிடம் கணபதி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் சாமுவேல், அவருடைய மனைவி கவிதா ஆகியோர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.
பின்னர், பெரிய நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஏராளமானவர்களிடம் தொடர்பு இருப்பதால் முதலீடு செய்தால் அதிக பங்கு தருவதாகவும் தெரிவித்தனர். இதனை நம்பிய ரேணுகா ரூ.48 லட்சத்தை இந்த தம்பதியிடம் கொடுத்துள்ளனர்.
ரூ.47 லட்சம் மோசடி
ஆனால் பங்கு தொகை எதையும் கொடுக்கவில்லை. செலுத்திய தொகையையும் திரும்ப கொடுக்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தியதை தொடர்ந்து ரூ.1 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி தொகையான ரூ.47 லட்சத்தை கொடுக்கவில்லை.
இதுகுறித்து ரேணுகா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் ராஜ்குமார் சாமுவேல், கவிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.