கார் பரிசு விழுந்ததாக கூறி ரூ.5 லட்சம் மோசடி


கார் பரிசு விழுந்ததாக கூறி ரூ.5 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கார் பரிசு விழுந்ததாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி முத்துபட்டினத்தை சேர்ந்தவர் ராஜாதி(வயது 42). கடந்த மாதம் இவருடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒருவர் தகவல் அனுப்பினார். அதில் அவருக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக கிடைத்துள்ளதாகவும், அதற்காக ஜி.எஸ்.டி. மற்றும் வரி கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய ராஜாதி பல்வேறு தவணைகளில் வங்கி மூலமாக ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 800 அனுப்பி உள்ளார்.

அதன் பின்னரும் அவருக்கு கார் கிடைக்கவில்லை. மேலும் அவர் கட்டிய தொகையும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜாதி இந்த மோசடி சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமசிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story