இளம்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி
பகுதிநேர வேலையில் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறி இளம் பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பகுதிநேர வேலையில் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறி இளம் பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண், ஒரு மில்லில் வேலை செய்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலையில் அதிகமாக சம்பாதிக் கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
உடனே அவர் அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைனில் வேலை உள்ளது. அதற்காக டெலிகிராம் குரூப்பில் சேர வேண் டும் என்று கூறினார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும் டெலிகிராம் குரூப்பில் அவர் இணைந்தார்.
அதிக வருமானம்
அதைத்தொடர்ந்து பேசிய அவர்கள், அந்த இளம்பெண்ணிடம் நாங்கள் தினமும் ஒரு டாஸ்க் கொடுப்போம் அதற்கு நீங்கள் பதிலளித்து பணம் செலுத்தினால் அதிகளவில் வருமானம் கிடைக்கும் என்று கூறினார்கள். இதையடுத்து அவர் முதலில் ரூ.1000 செலுத்தினார். அதற்கு உடனடியாக அந்த இளம்பெண் ணின் வங்கி கணக்கில் ரூ.1,250 கிடைத்தது.
பின்னர் அவர் ரூ.10 ஆயிரம் செலுத்தினார். அதற்கு லாபத்துடன் சேர்ந்து ரூ.12 ஆயிரத்து 250 கிடைத்தது. இவ்வாறு சிறிய தொகை செலுத்தியதும் உடனடியாக பணம் கிடைத்தது. பின்னர் ரூ.1 லட் சத்துக்கும் அதிகமாக செலுத்திய போது, உடனடியாக பணம் கிடைக்க வில்லை.
ரூ.6 லட்சம் மோசடி
இது குறித்து அந்த இளம்பெண் கேட்டதற்கு, நீங்கள் அதிகளவில் பணம் செலுத்தினால் உடனே லாபம் கிடைக்காது. உங்கள் கணக் கில் அந்த பணத்தை வரவு வைத்து விடுவோம். ஆனால் நீங்கள் சில நாட்கள் கழித்துதான் எடுக்க முடியும் என்று கூறி உள்ளனர்.
இதை நம்பிய அந்த இளம்பெண் பல்வேறு பரிமாற்றம் மூலம் ரூ.6 லட்சத்து 16 ஆயிரத்து 239-ஐ அனுப்பினார். ஆனால் அதற்கான லாப தொகையை கொடுக்கவில்லை. அத்துடன் அந்த பணத்தையும் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர்.
இது குறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.