பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி
x

பாளையங்கோட்டையில் பெண்ணிடம்ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பின்னி மனைவி ஜெனிக் பிளசிங் (வயது 32). இவரின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு இணையதளத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று வந்த தகவலை நம்பி அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கு யூ.பி.ஐ. ஐ.டி.க்கு முதலீடு செய்தார். குறைந்த அளவு பண முதலீட்டுக்கு லாபம் கிடைத்துள்ளது. அதனை நம்பி அவர் சுமார் ரூ.11 லட்சம் முதலீடு செய்தாராம். ஆனால் அதற்கு லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை என்பதால் தான் ஏமாந்ததை அறிந்த அவர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story