கொடைக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 110 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
கொடைக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 110 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
சோளிங்கர்
கொடைக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 110 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
சோளிங்கரை அடுத்த கொடைக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் சசிகலாகார்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சேகர், சோளிங்கர் ஒன்றிய காங்கிரஸ் தலைவர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிச்சாண்டி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு 110 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ''மாணவ -மாணவிகள் நன்றாக படித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து டாக்டர், கலெக்டர், காவல் துறை அதிகாரிகளாக வந்து சமுதாயத்திற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும்'' என்றார். மேலும் சமையல் அறை கட்டிடம், பள்ளி வளாகத்திற்கு தரை தளம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பாஞ்சாலை, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தவமணி, தினகரன் மற்றும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.