1,421 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
குடியாத்தத்தில் 1,421 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் எம்.எஸ்.அமர்நாத், ஜி.எஸ்.அரசு, தலைமை ஆசிரியர்கள் விஜயகுமார், உஷா, சங்கர், ஜெகன், லட்சுமி, கோமதி, சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் அகிலா, அம்பிகா ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கலந்து 10 பள்ளிகளை சேர்ந்த 1,421 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர் அன்பரசன், நகரமன்ற உறுப்பினர்கள் ஜாவித்அகமது, ரேணுகாபாபு, இந்துமதி கோபாலகிருஷ்ணன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கல்விக் குழு நிர்வாகிகள், உதவி தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.