172 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்


172 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி சேனை தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 172 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத் தலைவர் மகாஜன சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கவேஸ்வரன், துணைத் தலைவர் மூக்கையா, முன்னாள் செயலாளர் செண்பக விநாயகம், பொருளாளர் ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 172 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். மேலும் வன உயிரின வார விழா சம்பந்தமாக நடைபெற்ற கவிதை போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற 19 மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, நிர்வாக அதிகாரி வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், கவுன்சிலர் சித்ரா தேவி, பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் மகமாயி, கல்விக்குழு, அறப்பணிக்குழு, உறுப்பினர்கள் வீரகுமார், காசிராஜன், மோகன், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தமிழாசிரியை பேச்சியம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

1 More update

Next Story