2,963 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
பட்டுக்கோட்டையில் 2,963 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை பழனிமாணிக்கம். எம்.பி. வழங்கினார்.
பட்டுக்கோட்டை,:
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார். விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 21 பள்ளிகளைச் சேர்ந்த 2,963 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை பழனிமாணிக்கம் எம்.பி. வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன், நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுகன்யா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள், 21 பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், கல்வி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சி. தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.