58 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
தாகம்தீர்த்தாபுரம் அரசு பள்ளியில் 58 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
சின்னசேலம்
சின்னசேலத்தை அடுத்த தாகம்தீர்த்தாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கலையரசி சந்திரசேகர், பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் தமிழ்மணி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி 58 மாணவ-மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த மாணவி கவுசல்யாவை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரம்யா, பெற்றோர், ஆசிரியர் கழக இயக்குனர்கள் ஆதிமூலம், ஜெயசீலன், ரமேஷ், வெங்கடேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.