738 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


738 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

சோளிங்கர் ஒன்றியத்தில் 738 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொடைக்கல், ரெண்டாடி, நீலகண்டராயபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் 738 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது மாணவ-மாணவிகள் மருத்துவர்களாக, பொறியாளராக, கலெக்டர்களாக, ஆசிரியர்களாக வந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் பூரணசந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சசிகலாகார்த்தி, ரெண்டாடி பாபு, செங்கல்நத்தம் முனியம்மாள் பிச்சாண்டி, தலைமை ஆசிரியர்கள் மதிவாணன், பிச்சாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜ்வர்மா, மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஜெய்சங்கர், நற்குமரன், நகராட்சி கவுன்சிலர் கோபால் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story