ரூ.12 கோடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்


ரூ.12 கோடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்-  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுபள்ளியில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.12 கோடியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.,

தமிழக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னோடி திட்டங்களையும், பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக எதிர்கால சமுதாயத்தை கற்றறிந்த அறிவுசார் சமுதாயமாகவும், சிறந்த சமுதாயமாகவும் உருவாக்க மாணவர்களால் தான் முடியும் என்பதை கருத்தில் கொண்டு மாணவ மாணவியர்களின் கல்வியில் சிறந்தோங்க கல்வித் துறைக்கு ரூ.36,891 கோடி ஒதுக்கீடு செய்து இல்லம் தேடி கல்வி எண்ணம் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டம் போன்ற பல்வேறு சீரிய சிறப்பான திட்டங்களுக்கு செயல்படுத்தி வருகிறார்.

ரூ.12 கோடி விலையில்லா சைக்கிள்கள்

அதன் அடிப்படையில் மாணவர்கள் சரியான குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.மேலும் ரெயில் மற்றும் பஸ்சுக்காக காத்திருக்காமல் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக அரசின் மாணவ மாணவர்களுக்கான இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயிலும், அனைத்து மாணவ மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 832 மாணவர்களுக்கும், 13 ஆயிரத்து 80 மாணவியர்களுக்கும் என மொத்தம் 23 ஆயிரத்து 912 மாணவ மாணவியர்களுக்கு ரூ.12 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரத்து 960 மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது

என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story