மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

பனப்பாக்கம், நெமிலியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்னம் கலந்துகொண்டு 225 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

தொடர்ந்து நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் மயூரநாதன், நகர தி.மு.க. செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குலோத்துங்கன், சாரதி, செந்தமிழ்செல்வன், சகிலா விநாயகமூர்த்தி, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல் நெமிலியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் ஜனார்த்தனன், காங்கிரஸ் நகர தலைவர் வேலு, நகர இளைஞரணி ராகேஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story