மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x
தினத்தந்தி 8 Oct 2023 4:15 AM IST (Updated: 8 Oct 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

நல்லமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வேலுச்சாமி எம்.பி. வழங்கினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு திண்டுக்கல் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெள்ளிமலை தலைமை தாங்கினார். இதில் வேலுச்சாமி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, திண்டுக்கல் ஒன்றியக்குழு தலைவர் ராஜா, துணைத்தலைவர் சோபியா ராணி பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் கார்த்திகா செந்தில்குமார், மாணவரணி அமைப்பாளர் செந்தில், இளைஞரணி துணை அமைப்பாளர் ரூபன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கள்ளிப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, வெள்ளோடு, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

1 More update

Next Story