3 தமிழறிஞர்களுக்கு இலவச பஸ் பயண சலுகை
3 தமிழறிஞர்களுக்கு இலவச பஸ் பயண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு இலவச பஸ் பயண சலுகைக்கான அரசாணை மற்றும் திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிக்கு பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் கற்பகம் இலவச பஸ் பயண சலுகை அரசாணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தமிழறிஞர்களில் 2019-20-ம் ஆண்டிற்கு அங்கமுத்துவுக்கும், 2020-21-ம் ஆண்டிற்கு யசோதா, தேவராசு ஆகியோருக்கும் வழங்கினார். மேலும் அவர் 2022-23-ம் ஆண்டில் திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெற்ற தனியார் பள்ளி மாணவி ஹன்சிகாவுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். அப்போது மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் சித்ரா உடனிருந்தார்.
Related Tags :
Next Story