மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
x

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலவச பயிற்சி வகுப்பு

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது நேரடியாக வருகிற 27-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

இந்த அறிவிக்கையில் 3,552 காவலர் பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்துப் போட்டியாளர்களும் பயனடையும் வகையில் நேரடியாக வேலைவாய்ப்புத்துறை சார்பில் சிறந்த பயிற்சி வல்லுனர்கள் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகம்

மேலும், http://Tamil a ducats eraser vices.tn.gov.in -

என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு எழுதும் போட்டியாளர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயரினை முன்பதிவு செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story