பள்ளி மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி
பள்ளி மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்க 20-ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க கூட்டம் வாலாஜாவில் நடந்தது. மாவட்ட தலைவர் சந்தோஷ் காந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டி.கே.குமார் வரவேற்றார். கூட்டத்தில் மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி அளிப்பது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கவும், கோடைகாலத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களை தேர்வு செய்வதற்காக நேர்முகத் தேர்வு ராணிப்பேட்டையில் உள்ள பாரி மைதானத்தில் 20-ந் தேதி வரை நடைபெறும். மாணவர்கள் நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் சார்பில் மாவட்ட அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் செல்வகுமார், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.