1,011 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


1,011 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

1,011 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 170 மாணவ-மாணவிகள், கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 191 மாணவிகள், முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 152 மாணவ-மாணவிகள், வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 129 மாணவ-மாணவிகள், நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 85 மாணவ-மாணவிகள், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 86 மாணவ-மாணவிகள், படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 118 மாணவ-மாணவிகள், ஊதியர் சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளியில் 80 மாணவ-மாணவிகள் என மொத்தம் 1,011 மாணவ-மாணவிகளுக்கு ரூ.48¾ லட்சத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட கல்வி அதிகாரி பக்தவச்சலம், மாணவ-மாணவிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

---

3 காலம் படம் உள்ளது


Next Story