இலவச கண் பரிசோதனை முகாம்


இலவச கண் பரிசோதனை முகாம்
x

வள்ளியூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம் மற்றும் வள்ளியூர் ஐகேர், அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா வளாகத்தில் நடைபெற்றது. பங்குதந்தை ஜெரால்டு ரவி தொடங்கி வைத்தார். உதவி பங்கு தந்தை சிபு ஜோசப், தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரத்த அழுத்த நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் இலவசமாக பரிசோதனை செய்யபட்டது. கண் கண்ணாடிகள் வழங்கபட்டது.


Next Story