Free eye treatment camp | இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM (Updated: 22 July 2023 6:45 PM)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கீழ ஈரால் கிளை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கீழ ஈரால் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மேலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கீழ ஈரால் பஞ்சாயத்து தலைவர் பச்சை பாண்டியன் முகாமை தொடங்கி வைத்தார். பஞ்சாயத்து துணைத் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். முகாமில் கண் பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, லென்ஸ் பொருத்துதல் போன்ற கண் பரிசோதனை முகாம் நடந்தது. அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் ப்ரீத்தி, சவுமியா ஆகியோர் கொண்ட குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட கீழ ஈரால் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story