இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:45 PM GMT)

இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

தென்காசி

பனவடலிசத்திரம்:

திருமலாபுரத்தில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ பார்மசி, நண்பர்கள் ரத்ததான கண்தான விழிப்புணர்வு குழு, ரா.கிருஷ்ணம்மாள் நினைவு கண்தான அறக்கட்டளை, சேரை சிறகுகள் சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. பசும்பொன் குமரன் தலைமை தாங்கினார். பாலமுருகன் முன்னிலை வகித்தார். நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் லையனல் ராஜ் தலைமையில், டாக்டர் அனுபமா, விழி ஒளி ஆயவாளர் சிஞ்சு ஆகியோர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். அப்பல்லோ பார்மசி குழுவினர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கண்டறிய பரிசோதனை செய்தனர். கண்தானம் மற்றும் ரத்ததானம் பற்றி திருமலாபுரம் இளைஞர் அமைப்பு நண்பர்களிடம் கிருஷ்ணம்மாள் நினைவு கண்தான அறக்கட்டளை குமரேசன் எடுத்து கூறினார். முகாம் ஏற்பாடுகளை அகர்வால் கண் மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளர் ஆசை மாணிக்கம் மற்றும் சிவசுப்பிரமணியன், முக்கூடல் ஷேசாயி பேப்பர் மில், திருமலாபுரம் ஊர்நாட்டாண்மைகள் மற்றும் திருமலாபுரம் இளைஞர் அமைப்பினர் செய்திருந்தனர்.Next Story