இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

ராதாபுரம் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

ராதாபுரம் தாலுகா சிதம்பராபுரம் ஊராட்சி ஆத்துக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடங்குளம் அணுமின் நிலைய உள்ளூர் வளர்ச்சி திட்டம் மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி.ஜோசப் பெல்சி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அணுமின் நிலைய உள்ளூர் வளர்ச்சித்திட்ட துணைத்தலைவர் பண்டாரம் முன்னிலை வகித்தார். சிதம்பராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் வரவேற்று பேசினார்.

அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். கண் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.முகாமில் சிதம்பராபும், பிரகாசபுரம், அழகனாபுரம், ஆத்துக்குறிச்சி, வையக்கவுண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 74 பயனாளிகள் பயன்பெற்றனர்.

1 More update

Next Story