சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை
திருவெண்காடு:
இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஏழை மணமக்களுக்கு துறை சார்பில் இலவச திருமணம் செய்து வைக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் நேற்று ஒரு ஜோடிக்கு கோவிலில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் துறை சார்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், மேலாளர் சிவக்குமார், மாவட்ட தி.மு.க ஆதிதிராவிட நலக்குழு தலைவர் முத்தமிழ், தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story